பக்கம்:நல்ல கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது.

வேதாரண்யா! அவன் குரல் கெஞ்சலில் வந்து நின்றது. 'போய் என் சைக்கிளை எடுத்துகிட்டு வா! சீக்கிரமா போயிடுறேன், என்று சொல்லிவிட்டு வேதாரண்யத்திற்கு முன்னே ஓடினான் மணி.

புழுதியடைந்து கிடந்த அந்த சைக்கிளின் இரண்டு சக்கரங்களும் ஏழையின் கன்னங்கள் போல் ஒட்டிக் கொண்டு கிடந்தன.

பகீரென்றது மணிக்கு. 'பஞ்சராக கிடக்கிறதே! சைக்கிளும் சதி செய்து விட்டதே' எப்படி நான் போய் சேருவேன்? மணி ஒப்பாரி வைக்காமல் புலம்பினான்.

நாதசுவரத்துக்கு ஒத்து ஊதுவது போல வேதாரண்யமும் ஒத்து ஊதினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/51&oldid=1075352" இலிருந்து மீள்விக்கப்பட்டது