பக்கம்:நல்ல கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

52


உள்ளே வந்து நிற்கவாவது இடம், கிடைத்ததே என்று மகிழ்ச்சி. இருந்தாலும், உடையைப் பார்த்த பொழுது, கீழே உட்கார்ந்து ஒரு முறை அழ வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு.

பஸ்ஸிலே உட்கார்ந்து பத்துபேர் முன்னால் அழ முடியுமா?

பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு, உட்கார இடங்கிடைக்காமல், மேலே உள்ள கம்பியைப் பிடித்துக் கொண்டு, வெளவால் போல் தொங்கியவாறு பயணம் செய்தான்.

நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது.

'பத்து மணிக்குள்ளே இந்த பேருந்து போய் சேர்ந்துவிட வேண்டும்' என்று பெயர் தெரிந்த அத்தனையையும் கடவுளிடமும் வேண்டிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/54&oldid=1081179" இலிருந்து மீள்விக்கப்பட்டது