பக்கம்:நல்ல கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இரவு சினிமாவுக்குப் போகாமல் இருந்திருந்தால், காலையிலே சீக்கிரம் எழுந்திருந்தால், இப்படி ஒரு துன்பம் வந்திருக்காதே! அழகாக அப்பாவின் காரிலேயே போயிருக்கலாமே, என்று அவன் மனம் தானே பேசிக் கொண்டது.

அவனுடைய நல்ல காலம். சரியாகப் பத்து மணிக்குபோய் அவன் இறங்குமிடத்தில் பஸ் நின்றது மணியும் இறங்கினான்.

உள்ளே போவதற்குரிய வழி தெரியாமல் அந்தக் கம்பெனியின் சரியான வழியைக் கண்டு பிடிக்க முயற்சிப்பதற்குள், கால் மணி நேரம் கடந்துவிட்டது.

தன் முடியைத் திருத்திக் கொண்டு உடையை சரிபார்த்துக் கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/55&oldid=1081180" இலிருந்து மீள்விக்கப்பட்டது