பக்கம்:நல்ல கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

56


இல்லையென்று கூறி, களவுபோன தன் கதையைக் கூறினான். கடைக்காரனோ நம்பவே இல்லை. நம்புவானா அவன்?

கையிலே இருந்த மோதிரத்தை அவனிடம் கழற்றிக் கொடுத்து, நாளை வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று நடந்தான்.

மனதில் ஒரே குழப்பம். சிந்தனை செய்யக்கூட அவன் மனம் தயாராக இல்லை.

நடந்தே வீட்டுக்குப் போகலாம் என்பது தான் அவன் முடிவு. காலை வெயில் சுளீரென்று முகத்தில் அடித்தது. பசித்துக்கிடக்கும் வயிறு துடித்தது. கம்பெனியில் தனக்குரிய வாய்ப்பை இழந்த நிலை வேறு அவனை வாட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/59&oldid=1081184" இலிருந்து மீள்விக்கப்பட்டது