பக்கம்:நல்ல கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அவனால் நடக்க முடியவில்லை. எதிரில் இருந்த பூங்கா ஒன்றைப் பார்த்தான். சிறிது நேரம் படுத்து, ஓய்வு எடுத்துக் கொண்டால், பிறகு வீட்டிற்கு எப்படியும் போய் விடலாம் என்று நினைத்தான்.

ஒரு படர்ந்த பெரிய மரத்தின் நிழலில் இருந்த ஒரு நீண்ட பெஞ்சில் தன் சான்றிதழ்கள் உள்ள பையை தலைக்குத் தலையணையாக வைத்துக்கொண்டு, காலை நீட்டிப்படுத்தான். களைத்த கால்களுக்கு இதமாக இருந்தது. குளிர்ந்த காற்றும் சுகமாக வீசியது.

மணி, அப்படியே தூங்கிப் போய் விட்டான். எவ்வளவு நேரம் தூங்கினானோ அவனுக்கே தெரியாது

'எழுந்திருடா தடிப்பயலே! தூங்குவது போல பாசாங்கா செய்கிறாய்! தோலை உரித்துவிடு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/60&oldid=1081186" இலிருந்து மீள்விக்கப்பட்டது