பக்கம்:நல்ல கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

58


வேன். உண்மையைச் சொல்' என்று போலீஸ்காரரின் கைத்தடி, மணியின் முதுகில் விழவும் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து நின்றான் மணி.

என்ன பேசுவது என்றே தெரியாமல் நின்ற மணியின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியவாறு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார் போலீஸ்காரர்.

'ஐயா வெளியில் போயிருக்கிறார். உள்ளே இரு' என்று ஒரு அறைக்குள்ளே அனுப்பி வைத்தார் தலைமைக் காவலர். மணிக்கு இன்னும் ஒன்றுமே புரியவில்லை.

தன் சட்டைப் பைக்குள் அந்த சங்கிலி எப்படி வந்தது? தன் சட்டைப் பைக்குள் அந்த சங்கிலி இருக்கிறது என்று போலீசுக்கு எப்படித் தெரியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/61&oldid=1081187" இலிருந்து மீள்விக்கப்பட்டது