பக்கம்:நல்ல கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எல்லோரும் பார்த்தனர். அப்பொழுதும் யாரும் அந்தத் திருடனைப் பிடிக்க முன்வரவே இல்லை.

திருடன் தப்பி ஓடிவிட்டான். சிங்காரம் சுருண்டு கீழே விழுந்து கிடந்தான்.

கண் மூடித் திறப்பதற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியால் கற்சிலை போல் நின்றாள். அந்தப்பெண். சிறிது நேரங்கழித்தே சுய உணர்வு பெற்றாள். ஓடிப் போய் பையை எடுத்துக் கொண்டாள், சிங்காரத்திடம் ஓடோடி வந்தாள்.

மயக்கமாகக்கிடந்த சிங்காரத்தின் முகத்தில் சோடா வாங்கி வந்து தெளித்து, அவனது மயக்கத்தைத் தெளிவித்தாள்.

மயக்கம் தெளிந்த சிங்காரம், முனகியவாறு மெதுவாக எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/86&oldid=1081468" இலிருந்து மீள்விக்கப்பட்டது