பக்கம்:நல்ல கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

86


அழாதே தம்பி! எனக்கு வேண்டியவர்கள் ஒரு 'விடுதி' வைத்திருக்கிறார்கள். அங்கேயே தங்கிக் கொண்டு, அருகில் உள்ள பள்ளிக் கூடத்தில் படிக்கலாம், ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை நான் நிச்சயம் உனக்குத் துணையாக இருப்பேன்.

நன்றிப் பெருக்குடன் அந்த மாது கூறியவுடன், சிங்காரம் தலையை ஆட்டித் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

கார் நின்றது. சிங்காரத்தை வெளியிலே நிறுத்தி வைக்காமல் தன் கூடவே அழைத்துச் சென்றதும்; விடுதி தலைவியுடன் பேசும் பொழுது இருக்கை கொடுத்து அமரச்செய்ததும், பருகுவதற்குப் பானம் கொடுத்ததும், சிங்காரத்தின் மனதில் நம்பிக்கையை ஊட்டின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/89&oldid=1081471" இலிருந்து மீள்விக்கப்பட்டது