பக்கம்:நல்ல கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விடுதியிலே சேர்ந்து விட்டான் சிங்காரம். பள்ளிக்கும் ஒழுங்காகப் போகத் தொடங்கினான்.

மனதிலே தன் கடந்த காலத்தை நினைத்துக் கொண்டவாறே நடந்த சிங்காரம், தன் ஊருக்குள் நுழைந்ததையோ, தன் வீட்டு வாசலுக்கு வந்ததையோ மறந்து விட்டான்.

பல ஆண்டுகள் ஆனாலும், பழகிய அவனது கால்கள் வீட்டு வாசல் முன் தாமாகவே போய் நின்றன. காலில் கல் தடுக்கிவிட்ட பொழுதுதான், கற்பனை உலகத் தினின்றும் சுயநினைவுக்கு வந்தான்.

கண்கள் அந்த வீதியை ஒருமுறை சுற்றி வந்தன.

பல வீடுகள், அமைப்பில் மாறியிருந்தன. ஓடுகள் மாட்டிக் கொண்டிருந்தன. புதிய வண்ணங்களைப் பூசிக் கொண்டிருந்தன. ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/90&oldid=1081472" இலிருந்து மீள்விக்கப்பட்டது