பக்கம்:நல்ல கதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

88


அவன் வீடு மட்டும் தான் பார்த்தது போலவேதான் பழைய கோலத்தில் இருந்தது.

சூரியன் மறையத் தொடங்கி விட்டான். சுற்றிலும் இருள் வந்து கூடுவதற்குத் தயாராக இருந்தது.

தன் வீடு பூட்டியிருந்ததால் வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்துகொண்டான்.

வருவோர் போவோர் கூட, அவனையாரோ புதியவன் என்று பார்த்துக் கொண்டே சென்றனர். ஆனால் சிங்காரமோ யாரையும் தலை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

தன்னுடைய தாயையும், தந்தையையும் ஒரு முறைப் பார்த்து விட்டு, உடனே போய் விட வேண்டும் என்பதே அவனுடைய திட்டமாகும்.

தன் பின்னால் யாரோ வருவது போல் இருந்தது சிங்காரத்திற்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/91&oldid=1081473" இலிருந்து மீள்விக்கப்பட்டது