பக்கம்:நல்ல கதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


யாராயிருந்தால் நமக்கென்ன என்று இருந்தான்.

வந்தவன் சிங்காரத்தின் முகத்தைக் குனிந்து பார்த்தான். ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய், சிங்காரத்தைத் தாக்க ஆரம்பித்து விட்டான்.

முகத்திலே பல குத்துக்கள் விழுந்தன. முடிந்தவரை தடுத்துக் கொண்டான். அடித்துக் கொண்டிருக்கும் பொழுதே வாயில் பல வகைச் சொற்களைப் பேசிக் கொண்டிருந்தான் அடித்தவன்.

பலர் ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவனோ மீண்டும் அடிக்கத் துடித்துக் கொண்டிருந்தான்.

'சந்திரன் செத்துப் போயிட்டான்னா நினைச்சே! உன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/92&oldid=1081474" இலிருந்து மீள்விக்கப்பட்டது