பக்கம்:நல்ல கதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

90


சித்ரவதைசெய்யாட்டி என் ஆத்மா சாந்தியடையாதுடா'!

சந்திரன் தான் தன்னை அடித்தான் என்பதையும், அவன் சாகவில்லை என்பதையும் அறிந்த சிங்காரத்தின் மனம் மிகவும் அமைதி அடைந்தது.

'இத்தனை ஆண்டுகள் மனத் துன்பத்திற்கு ஆளாகி இருந்தோமே, என்று நினைத்தவாறே நின்று கொண்டிருந்தான் சிங்காரம்.'

முகத்தில் ஆங்காங்கே இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. கடைவாய்ப் பகுதியிலிருந்தும் இரத்தம் வழிந்தது.

சந்திரன் கத்தியதிலிருந்து, இங்கே அடிபட்டவன் 'சிங்காரம்' என்பதை அறிந்த அத்தனை பேரும் ஓடி வந்து அவனை ஆனந்தத்துடன் பார்த்தார்கள். சிலர் தழுவிக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/93&oldid=1081475" இலிருந்து மீள்விக்கப்பட்டது