பக்கம்:நல்ல கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

92


தன் வீட்டின் முன்னால் இருந்த கும்பலைப் பார்த்து விட்டு விரைந்து வந்தனர்.

'உன் மகன் வந்துவிட்டான்' என்று கூறக் கேட்ட சிங்காரத்தின் தாய், அவனை அப்படியே ஆரத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.

சந்திரன் அவனைத் தாக்கியதையும், சிங்காரம் எதிர்த்து அடிக்காமல் இருந்தையும், எல்லோரும் கதையாகக் கூறினார்கள்.

சிங்காரத்தின் தந்தை வேகமாக ஓடி வந்து 'ஏண்டா, உனக்கு மானம் வெட்கம் சூடு சொரணை ஏதுமில்லையா! அடி வாங்கிய - நீ, எதிர்த்து அடிக்கக்கூடவா உன் உடம்பில் வலுவில்லை!' என்று கோபமாகக் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/95&oldid=1081477" இலிருந்து மீள்விக்கப்பட்டது