பக்கம்:நல்ல கதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


'இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு'

என்ற குறளை மிகவும் அமைதியாகக் கூறினான் சிங்காரம்.

என்ன கூறுகிறாய் என்பது போல், எல்லோரும் அவனை ஏறிட்டுப் பார்த்தனர்.

தனக்குத் துன்பம் செய்கின்றவர்களுக்கும், அவர்கள் மனம் இன்பம் அடைவது போல பிரதி உதவி செய்வதுதான் மனிதப் பண்பாகும்.

தனக்குத் துன்பம் கொடுத்தவரை உடனே தண்டிப்பவர்களுக்குக் கிடைக்கும் இன்பம் ஒரு நாளைக்குத் தான் இருக்கும். அதை அமைதியாகப் பொறுத்துக் கொண்டவர்களுக்கு இன்பம் எப்பொழுதும் கிடைக்கும்' என்று மீண்டும் ஒரு குறளைச் சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/96&oldid=1081478" இலிருந்து மீள்விக்கப்பட்டது