பக்கம்:நல்ல குழந்தை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ஞானசம்பந்தருக்கு ஏறக் குறைய வயது பதினாறு இருக்கும். அதுவரையில் அவர் செய்த ஆச்சரியமான காரியங்களுக்கு அளவில்லை. அவைகளை யெல்லாம் நீங்கள் பெரியோர்கள் ஆகும்போது பெரிய புத்தகங்களில் படிப்பீர்கள்.

பிறகு, அவர் பல ஊர்களுக்குச் சென்று கடவுளை வணங்கிக்கொண்டு மயிலாப்பூர் என்னும் ஊருக்கு வந்தார்.

அவ்வூரிலே அப்போது ஒரு பணக்காரச்செட்டியார் இருந்தார். அவர் மிகவும் கடவுள் பக்தியுடையவர். அவருக்குப் பன்னிரண்டு வயதுள்ள ஒரு பெண் இருந்தாள். அப்பெண்ணும் கடவுள் பக்தி உடையவள். அவள் ஒரு நாள்

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/28&oldid=1354643" இலிருந்து மீள்விக்கப்பட்டது