பக்கம்:நல்ல குழந்தை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குப் பார்த்தாலும் பூப் பந்தல்கள், தோரணங்கள், பலவித வர்ணக் கொடிகள் முதலியன காணப்பட்டன. வாழைமரங்கள் வரிசை வரிசையாகக் கம்பங்களில் கட்டப்பட்டு இருந்தன. அவைகளோடு தென்னங் குலைகளும், பாக்குக்குலைகளும் ஈச்சங்குலைகளும், பனங்காய்க் குலைகளும் அழகாகக் கட்டப்பட்டு இருந்தன. மணமகனார் வரும்போது அவருக்கு ஆலம் சுற்றித் திருஷ்டி கழிப்பதற்காக ஒவ்வொரு வீட்டாரும் பலவித தீபங்களை ஏற்றி வீட்டை அலங்கரித்து வைத். திருந்தனர்.

ஞானசம்பந்தர் மணக் கோலத்துடன் சீர்காழியிலிருந்து மேளதாளங்களும், தாரை தப்பட்டைகளும், மற்றும் பலவித வாத்தியங்களும் கடல் போல் முழங்க முத்துப் பல்லக்கில் ஏறிக் கொண்டு ஊர்வலம் வந்தார்.

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/34&oldid=1354653" இலிருந்து மீள்விக்கப்பட்டது