பக்கம்:நல்ல குழந்தை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

ஞானசம்பந்தர், பதினாறுவயது ஆன பிறகும் தாய் தந்தையரிடம் மிகவும் மரியாதையாகவே இருந்தார். அவர் இவ்வளவு பெருமைகளை அடைந்தும் சிறிதும் கர்வங் கொண்டதில்லை; ஒருவரிடமும் கோபித்துக் கொண்டதில்லை. அவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அவர் எல்லோரிடத்திலும் மிகவும் அன்போடு பேசுவார்; பெரியோர்களைக் கண்டால் மிகவும் மரியாதை செய்வார்; பக்தர்களைக் கண்டால் கீழே விழுந்து வணங்குவார்; எப்பொழுதும் கடவுளையே மனத்தில் நினைத்துக்கொண்டு இருப்பார்.

இவ்வளவு சிறந்த குணங்களைப் பெற்ற ஞானசம்பந்தர் திருமணச் சந்தடியில் கடவுளை மறந்துவிடுவாரா?

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/39&oldid=1354682" இலிருந்து மீள்விக்கப்பட்டது