பக்கம்:நல்ல குழந்தை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறிதும் மறக்கமாட்டார் அல்லவா? ஆதலால் அவர், கோயிலுக்குச் செல்ல மிகவும் ஆசையோடு புறப்பட்டார். அங்கே சென்றதும் அவர் முதலில் தரையில் விழுந்து வணங்கினார்; பிறகு இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து நெடுநேரம் கடவுளை வேண்டினார்; மிகவும் அன்போடு பல அழகான பாட்டுக்களைப் பாடிக் கொண்டே அக்கோயிலைச் சுற்றிவந்தார். அப்போது திருமணப் பெண்ணும், ஞானசம்பந்தரின் தாய் தந்தையரும், மற்றும் உள்ள எல்லோரும் மிகவும் பக்தியோடு கடவுளைக் கும்பிட்டுக்கொண்டு கோயிலைச் சுற்றி வந்தார்கள்.

பிள்ளைகளே, “மோட்சம்” என்னும் சொல்லை நீங்கள் எப்போதேனும் கேட்டிருக்கிறீர்களா? பெரியோர்கள் அடிக்-

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/40&oldid=1354684" இலிருந்து மீள்விக்கப்பட்டது