பக்கம்:நல்ல குழந்தை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சம் தோன்றியது. அதே சமயத்தில் அங்கே இருந்த எல்லோருக்கும் தங்களை அறியாமல் ஒருவித ஆனந்தம் உண்டாயிற்று. ஞானசம்பந்தரும், அவர் மனைவியாரும், அவர் தம் அருமைத்தாய் தந்தையரும், மற்றுமுள்ள எல்லோரும் அன்போடு கடவுளை நினைத்துக்கொண்டே அந்த வெளிச்சத்தில் நுழைந்தார்கள். உடனே அவ்வெளிச்சம் மறைந்துவிட்டது. அவர்கள் எல்லோரும் மோட்சம் என்னும் பெரிய இன்பத்தை அடைந்தார்கள்.

ஆதலால் பிள்ளைகளே, நாமும் ஞானசம்பந்தரைப் போல் கடவுளிடம் பக்தியுள்ளவர்களாய், பொய் பேசாமல், கர்வம் கொள்ளாமல், ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் மிகவும் நல்லவர்களாய் நடந்து வரவேண்டும். அவ்விதம் நடந்-

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/43&oldid=1354695" இலிருந்து மீள்விக்கப்பட்டது