பக்கம்:நல்ல குழந்தை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

னார் அக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கோயிலுக்குப் போனார்.

உடம்பு குளிக்காமல் கோயிலுக்குப் போகக் கூடாது அல்லவா? ஆதலால், அந்தப் பிராமணர் முதலில் குளக்கரைக்குச்சென்றார். அவர் அக் குழந்தையைக் குளத்தின் படிக்கட்டின் மீது உட்கார வைத்தார்; பிறகு குளத்தில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தார். அப்போது, அக்குழந்தை அழாமல் தகப்பனாரையே பார்த்துக்கொண்டு இருந்தது.

குளிக்கும்போது சிலர் மூக்கைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் முழுகி மந்திரம் சொல்லுவார்கள். அந்தப் பிராமணரும் அன்று அவ்விதம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அந்தக் குழந்தை, தகப்பனாரைக் காணமல் சிறிது நேரம் விழித்தது; பிறகு,

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/9&oldid=1354581" இலிருந்து மீள்விக்கப்பட்டது