பாரதிதாசன்
9
மருத்துவனும், உயிர்ப்பினைக் கட்டுப் படுத்தும்
அறிஞனும் நாளோடு தவறாது காணும் முதுமையை
நீ சந்தித்ததில்லை எனில் புதுமை அன்றோ !
நிலவு கூறினாள்.
ஆடல் பயில்வாரின் உடல் வாடல் இல்லை.
புதுமை மாறாத ஆடற்கலைஞருக்கு
முதுமை நேருமோ பேரரசியாரே?
[அனைவர் கண்ணிலும் வியப்பு]
பேரரசியார் பேசுகின்றார்.
நிலவே! நீடுவாழ்க. புதியதோர் எண்ணம்!
நினைக்கும் தோறும் வியப்பைச் செய்யும்
ஓர் ஒப்பற்ற நிலை நீ தந்தாய் நீ வாழ்க!
ஆடல் அரங்கு முடிவு பெற்றது. அனைவரும்
உணவு கொள்ளச் செல்வோமாக.
[அனைவரும் செல்கிறார்கள். படைத் தலைவன்
மகளாகிய கிள்ளை மட்டும் பறக்கவில்லை]
காட்சி 2
[அரங்கில் ஒரு புறம். நிலவு காற்சதங்கையை
அவிழ்க்கக் குனிகிறாள். அதற்குள் வேறோர்
மலர் போன்ற கை சதங்கையை அவிழ்த்து
உதவி செய்கிறது.]
நிலவு : என் செல்வமே! நீ யார்?
கிள்ளை : அன்னையே! படைத்தலைவர் மகள்; கிள்ளை
நிலவு : உன் பிரிவு உன் அன்னை தந்தையர்க்குத் துன்பத்தைச் செய்யுமே!
கிள்ளை : ஆடல் பயிலவிரும்புகிறேன். அந்த விருப்பம்
என் உடலின் ஒவ்வோர் அணுவிலும்
2—6716