இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதிதாசன்
19
கன்னல் : இல்லை.
முல்லை : பின்னென்னம்மா
கன்னல் : அந்தக் கணையாழி?
முல்லை : எந்தக் கணையாழி?
கன்னல் : மாணிக்கக் கணையாழி?
முல்லை : திடுக்கிடும் சேதி, உங்கள் உயிர்
ஆயிற்றே? எங்கு விழுந்திருக்கும்!
கன்னல் : கூச்சலிடாதே, அது தவறியது உன்
தந்தையார் அறிந்தால் வருந்துவார். அது
மண நாளில் என் விரலில் அவர் இட்டது.
இங்குதான் இருக்கும். நீ செல் உணவுண்ண!
முல்லை : நானும் தேடுகிறேன் அம்மா!
கன்னல் : உணவருந்திய பின் தேடு.
முல்லை : இதோ வந்துவிட்டேன். [போகிறாள்]
கன்னல் : அதற்காக நீ செவ்வையாக உணவுண்ணாமல்
ஓடிவந்து விடாதே.