பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தூக்கிக்கொண்டு ரொட்டியைக் கௌவப் பார்க்கும். அப்போது கஸ்தூரி, தன் அலகுகளால் வீரனின் வாலைப் பிடித்துக்கொண்டுவிடும் ! உடனே முரளியும் சீதாவும் கடகட கான்று கைகொட்டிச் சிரிப்பார்கள். இப்படியே தினமும் பொழுது போக்குவார்கள்.

மாதங்கள் நான்கு சென்றுவிட்டன!

அன்று முதலிடம் சீதாவும் பள்ளிக்கூடம் போய்விட்டார்கள். வீரனும் வெளியிலே சுற்றப் போய்விட்டது. கஸ்தூரிமட்டும் எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்கும், இல்லாவிட்டால் வீட்டுக்கு அருகிலேயே திரியும். தூரமான இடத்துக்குப் போவதே இல்லை ; ஏன் தெரியுமா ? தன்னுடைய பாழய எஜமானர் எங்கேயாவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் !

அன்று, இது பங்களாவின் முன்னால் இருந்த புளிய மரத்தடியில் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்தான்; ஒரு துஷடப் பையன், அவனுக்குக் கஸ்தூரியை பார்த்ததும் என்ன தோன்றியதோ! ஒரு கல்லை எடுத்தான். 'விர்ர்.....' என்று விட்டெறிந்தான். ஐயோ, இதுவும் ஒரு விளையாட்டா!

அவனுடைய விளையாட்டு கஸ்துாரிக்கு வினையாக முடிந்தது . அவன் எறிந்த கல், கஸ்தூரியின் தலையில் நன்றாகப் பட்டுவிட்டது. உடனே அது அங்கேயே சுருண்டு விழுந்தது. தலையிலிருந்து இரத்தம், ‘குபுகுபு' என்று வெளியே வந்து கொண்டிருந்தது. கஸ்தூரி கீழே விழுந்ததும், அந்தக் கொலைகாரப் பையன் பயந்து ஓடிப்போய் விட்டான்.

சிறிது நேரம் சென்றது. முதலியாரின் மனைவி "எங்கே, கஸ்தூரியின் சப்தத்தையே காணோம் ?' என்று நினைத்துக் கொண்டே வெளியே வந்தாள். வீட்டுக்கு முன்னால் புளிய.

10