பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.பிறகு, முதலியார் தோட்டத்திற்குச் சென்றார். ஓர் இடத்தில் ஒரு குழியைத் தோண்டினார்; அங்கே கஸ்தூரியைப் புதைத்துவிட்டார்.

மாலை மணி ஐந்தரை இருக்கும்.

பள்ளிக்கூடம் விட்டு முரளியும், சீதாவும் வந்தார்கள். வீட்டுக்குள் நுழையும்போதே 'கஸ்தூரி!' என்று கூப்பிட்டாள் சீதா.

நல்ல நண்பர்கள்.pdf


எங்கே இந்த நேரத்தில் வாசலில்தானே நிற்கும் ? எங்கே போய்விட்டது? கஸ்தூரி ! கஸ்தூரி ! என்று பலமாகச் சத்தம் போட்டு அழைத்தான் முரளி.

கஸ்தூரி வரவில்லை. இருவரும் புத்தகப் பைகளை வைத்துவிட்டுத் தோட்டத்துக்கு ஓடினார்கள். அங்கேயும் கஸ்தூரியைக் காணோம் !

13