பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


இந்தக் கதி எப்படி நேர்ந்ததோ !” என்று அழுதது. உயிரில்லாத உடலை வைத்துக்கொண்டு என்ன செய்வது ! அதை மறுபடியும் அங்கேயே புதைத்தது; புதைத்த இடத்திலேயே தலையை வைத்துக்கொண்டு, வருத்தம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தது.

இந்தச் சமயத்தில்தான் முதலியாரும் வந்தார். அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. "வீரா, வீரா” என்று அழைத்தார். தட்டிக்கொடுத்துப் பார்த்தார். வீரன் எழுந்திருக்கவில்லை ; அழுதுகொண்டே இருந்தது. மூச்சுமட்டும் ஒடிக் கொண்டிருந்ததை முதலியார் அறிந்தார்.

நல்ல நண்பர்கள்.pdf

உடனே அவர் வீட்டுக்குள்ளே சென்றார். தம் மனைவியிடம் விஷயத்தை இரகசியமாகக் கூறினார். உடனே,

19