பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.“சரி, என்ன செய்வது ? நேரமோ அகாலமாகிவிட்டது. நாளைக் காலையில் பார்த்துக்கொள்ளலாம். போய்ப்படுங்கள்” என்று கூறினாள் முதலியாரின் மனைவி.

முதலியார் வேறு வழியின்றி போய்ப் படுத்துவிட்டார். அவருடைய மனைவியும் சாமான்களையெல்லாம் துலக்கிப் போட்டுவிட்டுப் படுத்துக்கொண்டாள் .

முதலியார் -அசதியால் நன்றாகத் தூங்கிவிட்டார், அவருடைய மனைவிக்கும் நல்ல தூக்கம், ஆனால், முரளியும், சீதாவும் இன்னும் தூங்கவில்லை. படுத்தபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ஏனண்ணா, கஸ்தூரி நாளைக் காலையில் வந்து விடுமா?” என்று கேட்டாள் சீதா.

“வராமலென்ன? அப்பாதான் வாங்கி வருவதாகச் சொல்லியிருக்கிறாரே! அவசியம் வாங்கிக்கொண்டு வந்து விடுவார்” என்று கூறினான் முரளி.

“ஆமாம், அண்ணா ! கஸ்தூரியை வாங்கிப்போனவன் அதைப் பத்திரமாக வைத்திருப்பானா ? சாகடித்திருக்க மாட்டானே, அண்ணா ?” என்று திகிலுடன் கேட்டாள் சீதா.

“சேச்சே, அது எவ்வளவு அழகானது ! எவ்வளவு அன்பாக இருக்கும் ! அதைக் கொல்ல யாருக்காவது மனம் வருமா! நிச்சயம் அவன் அதைக் கொன்று இருக்கவே மாட்டான்” என்று சமாதானம் கூறினான் முரளி.

“அண்ணா , கஸ்தூரி இங்கே இல்லாமல் என்னவோ போல இருக்கிறதே ! அம்மா அப்பாவுக்குக்கூட இன்றைக்கு அழுகை வந்துவிட்டது, பார்த்தாயா! கஸ்தூரி வந்தால்தான்

22