இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வீரனுக்கும் சந்தோஷம் வரும் போல இருக்கிறது. அதுவரை யில் என்ன சொன்னாலும், கேட்கவே கேட்காது. நிச்சயமாக அப்பா காளைக்கு வாங்கி வந்துவிடுவாரல்லவா ?” என்று மறுபடியும் சீதா கேட்டாள்.
“வாங்கிக்கொண்டு வராவிட்டால் அப்பாவைச் சும்மா விடுவோமா ?” என்றான் முரளி.
இருவரும் இப்படியே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். முரளிக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கம் வந்துவிட்டது ; தூங்கிவிட்டான். சீதாவும் பேசுவதற்குத்
23