பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
"ஐயோ! இந்தப் பாழாய்ப்போன புயல் காற்று ஏன்தான் அடித்ததோ?” என்று கூறிக்கொண்டே அழுதாள் சீதா.

வீரனுடைய தலை, முகம் எல்லாம் ஒரே இரத்தமாக இருந்தது. அடையாளமே தெரியவில்லை உடனே இருவர் கண்களிலும் ‘மளமள’ என்று கண்ணீர் வழிய ஆரம்பித்தது. ‘ஓ!’ வென்று அழுதனர்.

"அப்பா ! அப்பா ! என்று கதறிக்கொண்டே அப்பாவை அழைத்துவர ஓடினாள் சீதா. முரளியோ தென்னை மரத்தைத் தூக்கிவிட்டு, வீரனின் முகத்தைப் பார்க்கத் துடியாய்த் துடித்தான். ஆனால், தென்னை மரத்தை அவனால் நகர்த்தக்கூட முடியவில்லை !

இதற்குள், சீதாவுடன் அப்பாவும், அம்மாவும் அந்த இடத்துக்கு ஓடோடியும் வந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டதும், அவர்களுக்குத் துக்கி வாரிப்போட்டது எல்லோரும் வாய்விட்டுக் கதறிவிட்டார்கள்.

சப்தத்தைக் கேட்டு, வீதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் கூட வந்துவிட்டார்கள். அவர்களின் உதவியால் தென்னை மரம் அப்புறப்படுத்தப்பட்டது. தென்னை மரத்தைத் துக்கியதும் சீதாவும், முரளியும் வீரன் அருகில் சென்றார்கள். முகத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.

"வீரன் இறந்து போய்விட்டதா, அப்பா ? மூச்சைக் காணோம் !" என்று அழுதுகொண்டே கேட்டாள் சீதா.

"இவ்வளவு பெரிய மரம் விழுந்தால், எப்படிப் பிழைக்கும்?” என்று முதலியாரின் வாய் முணுமுணுத்தது.

"ஐயோ, வீரா ! நீ எங்களை விட்டுப் பிரிந்துவிட்டாயே!. இனி, எப்படி எங்களுக்குப் பொழுது போகும்? இனிமேல்-

26