பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


வீரனைப் பார்க்கவே முடியாதா?” என்று அதன் முகத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டே அழுதான் முரளி.

"ஐயோ ! நீ ஏன் இந்த இடத்துக்கு வந்தாய்? சாகவா வந்தாய்?” என்று வீரன்மீது தலையைச் சாய்த்துக் கொண்டே அழுதாள் சீதா.

இனிமேலும் உண்மையை ஒளித்துவைக்க முதலியாரால் முடியவில்லை. உடனே அவர், மெதுவாக வீரனைத் தூக்கி அப்புறம் வைத்துவிட்டு, அங்கிருந்த குழியைத் தோண்டினார். உள்ளேயிருந்த வாத்தை வெளியே எடுத்தார்.

வாத்தைப் பார்த்ததுதான் தாமதம் : முரளிக்கும் சீதாவுக்கும் தலை சுற்ற ஆரம்பித்தது!

“ஐயோ, கஸ்தூரி ! நீயுமா இறந்தாய்?” என்று கதறினான் முரளி.

“என்ன இது கஸ்தூரி, எப்படி இறந்தது எப்படி இங்கே வந்தது” என்று ஆச்சரியத்துடன் கதறிக் கொண்டே கேட்டாள் சீதா.

நடந்தவற்றையெல்லாம் முதலியார் ஆதியிலிருந்து ஒன்று விடாமல் கூறினார். கேட்கக் கேட்க இருவருக்கும் வருத்தம் அதிகமாகிக்கொண்டே வந்தது. துக்கம் அதிகமாகித் தொண்டையை அடைத்துக்கொண்டது. பேசவே முடியவில்லை.

நடந்ததையெல்லாம் கேட்ட போது, அங்கே கூடியிருந்தவர்களின் கண்களும் கலங்கிவிட்டன.

“அடடா ! இந்த மாதிரி ஒரு நாயை எப்போது பார்க்கப்போகிறோம் ! அந்த வாத்துக்காகவே இது உயிர் விட்டிருக்கிறதே நட்பு என்றால் இதுவல்லவா நட்பு ! தியாகம் என்றால் இதுவல்லவா தியாகம்! இந்தக் குழந்தைகள்தாம் அவற்றினிடத்தில் எவ்வளவு அன்பாக இருந்தார்கள் ! ஐயோ, பாவம் இனி இவர்களுக்கு எப்படித்-

27