இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தான் பொழுது போகுமோ ! அவை இருந்தால் இந்த வீடு எவ்வளவு கலகலவென்று இருக்கும் !” என்று பேசலானார்கள்.
அந்தத் தோட்டத்திலேயே வீரனையும் கஸ்தூரியையும் புதைத்து வைத்தார்கள்.
அன்று முதல், முரளியும் சீதாவும் மாலை நேரங்களில் வெளியில் விளையாட்ப் போவதே இல்லை. வீரனையும், கஸ்தூரியையும் புதைத்த இடத்திலே தான் இருந்து வருகிறார்கள். அங்கே, அவர்கள் ஆளுக்கொரு செடி நட்டு வைத்திருக்கிறார்கள். ஒரு செடிக்குப் பெயர் வீரன் செடி : இன்னொரு செடிக்குப் பெயர் கஸ்தூரிச் செடி. அந்தச் செடிகளுக்குத் தினமும் தண்ணீர் ஊற்றி, அவர்கள் அருமையாக வளர்த்து வருகிறார்கள்.
இப்போதுதான் அந்த இரு செடிகளும்
- புஷ்பிக்க ஆரம்பித்திருக்கின்றன.