பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.வீரன் அதன் அருகே சென்றது. மிகுந்த இரக்கத்துடன், "ஏன் தங்கச்சி அழுகிறாய் ! என்ன காரணம் ?’ என்று கேட்டது.

ஒன்றுமில்லை, அண்ணா ! என் உயிர் நாளையோடு போகப் போகிறதே என்ற கவலைதான் ” என்றது வாத்து.

நல்ல நண்பர்கள்.pdf

“என்ன, நாளையோடு உன் உயிர் போகப்போகிறதா ?”

"ஆம், அண்ணா ! என்னை இவ்வளவு நாளும் வளர்த்து வந்த எஜமானன் அளை என் உயிரை வாங்க போகிறாராம். நாளைக்கு அவருடைய மாப்பிள்ளை ஊரிலிருந்து வருகிறார். அவருக்கு ஒரு விருந்து வைக்கப் போகிறார்களாம். அது தான்...... ” இதற்கு மேல் அதனால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக்கொண்டது. கண்களிலிருந்து ‘மள மள’ என்று கண்ணிர் வந்தது.

4