பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.“அட பாவமே உன் எஜமானனுக்குக் கொண்டாட்டம உனக்குத் திண்டாட்டமா? சரி, அழாதே. நீ ஏன் இதற்குக் கவலைப்பட வேண்டும் நாளைக்குத்தானே விருந்து இப்பொழுதே எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போய்விட்டால் போகிறது !” என்றது வீரன்.

“ஓடிப்போய்விடலாம். ஆனாலும், எங்கே போனாலும் மனிதர்கள் என்னைச் சும்மா விடவா போகிறார்கள் அத்துடன், இவ்வளவு நாளும் எனக்கு ஏராளமாகத் தீனி போட்டு அருமையாக வளர்த்தாரே, அந்த எஜமானனை மோசம் செய்துவிட்டு ஓடிப்போவது நல்லதா ? அதுதான் யோசிக்கிறேன். நீயே சொல்” என்றது வாத்து.

“அட பைத்தியமே! இவ்வளவு நாளும் உனக்குத் தீனி போட்டார்களே, அது உன் நன்மைக்கா ? இல்லவே இல்லை. நீ கொழுத்தால், அவர்களுக்குத்தாமே லாபம் ! உன்னை அறுத்தால் அதிகமான மாமிசம் கிடைக்கும் என்றுதான் அவர்கள் இப்படி அருமையாக வளர்த்திருக்கிறார்கள். இது உனக்குத் தெரியவில்லையே......சரி, அதைப்பற்றி இப்போது யோசிப்பதில் பயனில்லை. இனி ஆகவேண்டியதைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீ இங்கேயே இருந்து சாக வேண்டியதுதான்’ என்றது வீரன்.

"நீ தான் ஒரு வழி சொல்ல வேண்டும், அண்ணா ! எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!” என்று கெஞ்சிக் கேட்டது வாத்து.

வீரன் சிறிது கேரம் யோசித்தது. பிறகு, “சரி. ஒரு வழி சொல்லுகிறேன், கேள். என் எஜமானரின் பங்களா இந்த ஊரின் கடைசியில் இருக்கிறது. என் எஜமானர் மிகவும் நல்லவர். அவர் மனைவி மிக மிக நல்லவள். அவர்களுடைய

5