பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


குழந்தைகள் மிக மிக மிக நல்லவர்கள். நீ என்னோடு வந்தால், உன்னை என் எஜமானர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே உனக்கு எந்த விதமான ஆபத்தும் வரவே வராது. அவர்கள் உன்னை அன்போடு வளர்ப்பார்கள், வரச் சம்மதமானால் வா; அழைத்துப் போகிறேன்” எனறு யோசனை கூறியது வீரன்.

'இங்கே இருந்தால், சாவது நிச்சயம். எங்கேயாவது போனால், ஒருவேளை பிழைக்க வழி கிடைத்தாலும் கிடைக்கலாம்’ என்று எண்ணியது வாத்து.

உடனே வீரனிடம், 'சரி அண்ணா, உன் யோசனைப் படியே கடக்கிறேன். கடவுள் விட்ட வழி விடட்டும்’ என்று புறப்பட ஒத்துக்கொண்டது.

உடனே இரண்டும் புறப்பட்டன. வீரன் முன்னாலும் வாத்து பின்னாலும் குறுக்குப்பாதை வழியாகவே சென்றன. வழியெல்லாம் வாத்து பயந்துகொண்டே சென்றது. தன் எஜமானன் எங்கேயாவது கண்டுபிடித்துவிடுவானோ என்ற சந்தேகத்துடன் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தது. ஆனாலும், வீரன் அதற்கு வழி நெடுகத் தைரியம் ஊட்டிக்கொண்டே வந்ததால் வரவரப் பயம் குறைந்தது.

வீரனுடைய எஜமானரின் பங்களா நெருங்கிவிட்டது. பங்களாவின் வாசலில் எஜமானரின் இரண்டு குழந்தைகளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

வீரனும், அதன்கூட ஓர் அழகான வாத்தும் வருவதை அவர்கள் கண்டார்கள். உடனே, அளவில்லாத ஆனந்தம் அடைந்தார்கள்.

6