பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 இன்றே பட்டினி போட்டுவிட்டாள்! ஏனென்று கேட்டேன் திட்டிவிட்டாள்! செய்தது நானும் சரிதானே! பொய் எனில் பாட்டியை கேளண்ணே! (தருமன் பாட்டியிடம் போகிறான்) தருமன்: பாட்டி இதுவும் சரிதானோ! பட்டினி போட்டது முறைதானோ எத்தனை கோபம் இருந்தாலும் இப்படி செய்வது குணம்தா னோ! பாட்டி: தருமா தருமா இதைக் கேளேன். தர்மம் எதுவென நீ சொல்லேன்! வீட்டில் குழந்தை வளர்மதியும் வளர்வது உனக்குத் தெரியாதோ! அன்புப் பாப்பா அருள் பாப்பா அழகுப் பாப்பா நீயறிவாய்! இன்று செய்திட்ட குழப்பத்தினால். எல்லாம் நடந்தது வருத்தத்தினால், சாதம் கேட்டாள் பசிக்குதென்று; தந்தேன் நானும் புசியென்று! கையில் வாங்கிப் போட்டுவிட்டாள். காரணம் கேட்டேன் அழுகின்றாள்.