பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கைக் கரையோரம் சிறு விளக்கம் இதிகாச காவியமான இராமாயணத்திலி ருந்து ஒரு காட்சியை இங்கே நாட்டிய நாடகமாக ஆக்கித் தந்திருக்கிறேன்.

  • . கைகேயி கேட்ட வரத்தின்படி, தசரதன் தந்த ஆனையின் வழி, இராமன் கானகத்திற்குச் செல்வதில் தொடங்கி, குகனை சந்தித்து உரையாடுவது; பரதனை எதிர் நோக்கி ஏற்றுக் கொள்வது போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து, இந்நாடகம் உருவாக்கப் பட்டிருக்கிறது.

பலமுறை நாட்டிய நாடகமாக அரங்கேறி இருக்கும் இந்நிகழ்ச்சிக்குரிய பாடல்களுக்கு உரிய இராகங்களை தயாரிப்பில் ஈடுபடுபவர் களே அமைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கதைமாந்தரும் உரையாடுவது போன்ற அமைப்பில்தான் இக்கதைப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இதனை அரங்கேற்றும் நேயர்கள் இதில் இன்னும் செழுமை சேர்க்க வேண்டும் என்று விரும்பினுல் தங்கள் கருத்துக்களை எழுதினால், ஏற்று இணைத்து வெளியிட விரும்புகிறேன். உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். நவன