பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 பரதன் அண்ணு' இதுகொடுமை! அன்னையின் - பெருமடமை! அண்ணு' உன்பொறுமை! ~ ஆள்வே தா என்கடமை! உனக்கா கானகம்? எனக்கா தாயகம்? நினைக்கவே முடியாத நிலையிது பயங்கரம்! (தம்பி சத்துருக்கனனைப் பார்த்து) தம்பி நீஎழுவாய்! தாமதம் வேண்டாமே! களம்புகும் படைகளைக் கடலெனத் திரட்டு கண் இமைக்கும் நேரத்தில் அண்ணன் - முகம்காண முன்னே நடைபோடு! மின்னலின் விரைவோடு. படை நடந்தது கத்தும் கடல்போல் நடந்தது பெரும்படை முத்துச் சரம்போல் அசைந்நது எழிற்கொடி !