பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை. தமிழின் இனிமை அதன் எதுகை, மோனை, சந்தம் இவற்றில் தான் நிறைய நிரம்பிக் கிடக்கிறது. குழந்தைகள் அதன் இனிமையில் ஈடு பாடு கொண்டு விட்டால், தமிழ் மேல் மாளா அன்பும் மாரு உறவும் கொண்டு விடுவார்கள், அந்த உறவினை கதை மூலம் தந்தால், எளிமை யாகவே ஏற்றுக் கொள்ளச் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான், கதைகளை பாடல்களாக்கித் தந்திருக்கிறேன். படிக்கும் பொழுதே புரிந்து கொள்ளக் கூடிய வகையிலே பாடல்கள் எளிமையான சொற்களால் ஆக்கப் பங்டிருக்கின்றன. பள்ளிக் குழந்தைகளே பாடி நடித்த இரண்டு நாட்டிய நாடகங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. படிப்பதற்கு சுவையானது போலவே, நடிப் பதற்கும் ஏற்றவாறு எழுதப் பெற்ற இப்பாடல்கள், பள்ளிகளுக்கும் மட்டுமல்ல, வளரும் இளைஞர் களுக்கும் உதவும் என்று நம்பியே உங்கள் கைகளில் தந்திருக்கிருேம். வளமான உடல் பெற எனது விளையாட்டுத் இறை நூல்கள் உதவுவது போல, நலமான மனம் பெற இக்கதைப் பாடல்கள் உதவும் என்று அளித் திருக்கிறேன். 'ேஅளித்துவரும் அன்பர்கள் அனைவருக்கும் " கன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். foհ I t yi ՀՀ . . : ---" # (i. அான மலர் இல்லம் எஸ். நவராஜ் செல்லையா. சென்ை o * னனை - 17 10 - 1 1 - 81