பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 காலத்தின் பெருங்கருணை காவிரிக்கு நிறைந்ததம்மா! கோலத்தின் அழகையெல்லாம் தினம்கொண்டு வளர்ந்ததம்மா! பருவத்தின் பேரழகு பயணத்தில் மலர்ந்ததம்மா! உருவத்தில் செழுமைகண்டு உலகமே வியந்ததம்மா! கண்டுவந்த மக்களெல்லாம் கட்டிவிட்டார் ஓர் அணையை கொண்டுவந்து தந்துவிட்டார் கூடிவரும் ஓர் துணையை. அது- கண்ணம்பாடி அணை புது - வண்ணம் பாடும் துணை! கரையிரண்டில் பசுமை யெல்லாம் கலந்து கொண்டது - அந்தக் கலப்பினிலே தோட்டமாகக் காட்சி தந்தது. குறைவில்லாத கனிகளாக குவிந்து கிடந்தது- அந்தக் குவியலிலே வாசனைகள் கூடி மலர்ந்தது.