இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எனக்கும் பொம்மைக்கும் சண்டையம்மா ஏனே என்றுநீ கேளாதே உனக்கும் விளங்கச் சொல்லவே ஓகோ என்னல் ஆகாதே
குளிக்கக் கூப்பிட்டால் ஓடிவிடும் குப்புறக் கிடந்தே தேம்பியழும் அழுக்குச் சட்டையை மாற்றிடவே ஆயிரம் ஆயிரம் தொல்லைதரும் மண்ணைத் தலையில் போட்டுக் கொள்ளும் வாயைத் திறக்காது பாலைக்கண்டால் என்னென்ன பாடு படுத்துதென்னை
எனக்கும் பொம்மைக்கும் சண்டையேதான்.