பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குழந்தை : “குருவி குருவி கூடெங்கே? கொஞ்சிப் பேசுங் குஞ்செங்கே?” குருவி : 'மறைவாய் ஆங்கோர் கூரையிலே வைக்கோல் கொண்டொரு கூடுசெய்தே பஞ்சும் இறகும் போட்டதிலே பாங்காய் மெத்தையும் செய்தங்கே குஞ்சுகள் ரண்டையும் காத்திடுவேன் கூட்டின் பக்கம்நீ போகாதே’ : குழந்தை : "குருவி குருவி சொல்எனக்கே கூடும் குஞ்சும் எங்கென்றே" 12