பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


குருவி :
"பாப்பா நீயும் தேடாதே
பச்சிளங் குஞ்சுகள் பயம்அடையும்
காப்பாய் நீயென எப்படிநான்
காண்பேன் எனக்கே சொல்வாயே"

குழந்தை:
"குருவீ குருவீ பயமேனோ?
குஞ்சுங் கூடும் காப்பேன் நான்
அருகே பூனைகள் வந்தாலும்
அதட்டியே ஓட்டுவேன் அஞ்சாதே"


அன்பு செய்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
குஞ்சும் குஞ்சும் கதறிப்
பஞ்சம் பஞ்சம் அதனால்
தஞ்சம் தஞ்சம் என்றால்
கொஞ்சம் கொஞ்சம் இளகா
நெஞ்சம் மிஞ்சும் கல்லை.

13