பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆடு மேய்க்கும் அண்ணு-உன்றன் கூட நானும் வருவேன் காடு மேடும் சுற்றி-நல்ல காட்சி காண வேணும். துள்ளி ஓடும் ஓடை-அதில் சோம்பிப் படுக்கும் எருமை குள்ள வாத்துக் கூட்டம்-வெள்ளைக் கொக்கும் அங்கு காண்பேன். பச்சை அலைகள் போலே-அசையும் பயிர்கள் வளரும் வயல்கள் உச்சிக் கிளையில் கொஞ்சும்-அருமைப் பச்சைக் கிளியும் பார்ப்பேன். அரச மரத்தின் கனியை-உண்டு அழகாய்ப் பேசும் மைனு கரிய குயிலின் பாட்டை-நன்கு காதிற் கேட்டு மகிழ்வேன். காட்டுச் செடியும் கொடியும்-பற்றி ஆட்டுக் குட்டி தின்ன ஒட்ட மாகச் சென்றே-பெரிய உதவி நானும் செய்வேன், 15