பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலை அறையில் இறைவன் பதத்தில் என்னையும் வைப்பாயே முத்து முத்தாய்க் கண்ணிர் சிந்தத் தொழுது நிற்பாயே ஆசை மைந்தன் ஓங்கி வளர அருள்க என்பாயே அன்னுய் அதனை க் கேட்டு நானும் அகமகிழ்ந் திடுவேன் பூசை முடிந்து வெளியில் வந்தே என்னைக் கூப்பிடுவாய் புகுந்து புகுந்து அறைகள் எல்லாம் தேடிப் பார்த்திடுவாய் எங்கே எங்கே கண்ணே வாடா என்றே நீ துடிப்பாய் எனக்குச் சிரிப்புப் பொங்கி வந்திடும் என்ருலும் நானும் மங்கா தங்கே இறைவன் பதத்தில் மகிழ்ந்திருப் பேனே மனத்தில் துயரம் ஓங்க நீயும் வருவாய் கடவுள் முன் கந்தா கண்ணு என்றன் மகவைக் காப்பாற்றிக் கொடுப்பீர் காலில் விழுந்தேன் என்றே அலறி நொந்தே நீ விழுவாய் 19