பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.நல்ல நல்ல பாட்டு.pdf

பத்து வாத்துக் குஞ்சுகள்
அத்தை வீடு சென்றன
கத்திக் கத்தி வழியிலே
மெத்தக் காவல் வேண்டின

நல்ல நல்ல பாட்டு.pdf


கன்றுக் குட்டி மூன்றுடன்
கழுதைக் குட்டி ரண்டுமே
ஒன்றுக்கொன்று போட்டியாய்
ஓடிக் காவல் புரிந்தன

குள்ள நரியும் வந்தது
குறுகிக் கூனிப் பார்த்தது
கள்ளப் பார்வை கண்டுமே
கதறிக் குஞ்சுகள் கூவின

நல்ல நல்ல பாட்டு.pdf

எட்டி உதைக்கக் கால்களை
மெட்டிக் கழுதைக் குட்டிகள்
தட்டி வீசிடக் கன்றுகள்
முட்டிப் பாய வந்தன

32