பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வானம்இருண்டு மழைபெய்து ஓய்ந்தது வாருங்கள் ஓடி விளையாடுவோம் மேனிகுளிரவே மாநிலத் தாய்இங்கு வெள்ளத்தில் ஆடிச் சிரித்துநின்ருள் வீதியில் ஓடி வருகின்ற நீரினை வேகமாய்க் கட்டித் தடுத்திடுவோம் பாதையைத் தள்ளியோர்சின்னக்குளம்வெட்டிப் பாங்குடன் வெள்ளத்தைத் தேக்கிடுவோம் புத்தம்புதிய தோர் பச்சைநிறம் போர்த்துப் பூவரச மரம் நிற்பதைப் பார் முத்துத்துளி கோத்து மின்னும்இலையுடன் முன்நிற்கும் மாமரக் கூட்டத்தைப்பார் மாலைக் கதிரவன் பொன்னுெளி தூவியே மங்களம் கூட்டி மகிழ்ச்சி கொண்டான் கோலமாயெங்கும் இளமை செழித்தது கூடியே ஆடிட வாருங்களே.