பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எங்கள் வீட்டுத் தோட்டம்-அதற்கு எத்தனை பறவை வருமோ ! மஞ்சள் மூக்கு மைனு-இரண்டு வந்து பூச்சி பிடிக்கும் சிட்டுக் குருவி பத்து-மணலில் தினமும் முழுகிக் குளிக்கும் பெட்டைக் கோழி ஒன்று-குஞ்சைப் பிரியமாகக் காக்கும் சின்னஞ் சிறிய சிட்டு-பூவின் தேனைக் குடிக்கும் சிட்டு கன்னங் கரிய சிட்டு-அதுவும் காலைப் பொழுதில் வருமே பச்சைக் கொன்றைக் காயைப்-பறித்துப் பவழ வாயில் தின்னும் பச்சைக் கிளியின் கூட்டம்-புதரில் பறந்து பறந்து மறையும் அழகுக் கொண்ட லாத்தி-தரையை ஆணி மூக்கால் குத்திப் புழுவைத் தேடி யுண்ணும்-மெதுவாய்ப் பூனை வந்தால் பறக்கும் எங்கள் வீட்டுத் தோட்டம்-அதிலே எத்தனை எத்தனை பறவை! அங்கு நானும் செடியின்-மறைவில் அவற்றைப் பார்த்து மகிழ்வேன். 37