பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பரந்த நீலக் கடல்பாராய்-- அதைப்
பார்க்கப் பார்க்க மகிழ்வோங்கும்
தெரிவதும் இக்கரை ஒன்றேதான்-பிற
திசைகள் எல்லாம் தண்ணீரே!

கண்ணுக் கெட்டாத் தொலைவினிலே--விரி
கடலினை வானம் தொடுவதுபார்
வெண்ணுரை பொங்கச் சுருள் அலைகள் --பல
விதமாய்ப் புரளும் கோடி அவை

ஒன்றாய் நாகம் பலகூடிப் படம்
உயர்த்திக் கரையை மிகச் சீறி
நன்றாய்த் தாக்கிட வருவனபோல்--எந்
நாளும் வருமெழில் என் சொல்வேன்!

அரவம் ஓயா அலைகளவை--அணி
அணியாய் எழுந்தே உருண்டு வரும்
பரதவர் பலபேர் கட்டுமரம்--தனில்
பாய்ந்தே ஏறிச் சென்றிடுவார்

38