பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எட்டே எட்டுச்
சிட்டுக் குருவிகள்
கட்டாந் தரையில்
கொட்டிய மணலில்
ஒட்டாய் அமர்ந்து
வட்டமாய்க் கூடிச்
சிட்சட் என்றே
சட்டங்கள் எல்லாம்
வெட்டெனப் பேசித்
தொட்டே மூக்கில்
பட்டுடல் கோதித்
திட்டமாய் மணலில்
முட்டியே முழுகிக்
கொட்டங்கள் அடித்து
எட்டியே பார்த்துச்
சட்டெனப் பறந்தன.