பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மின்னும் மின்மினி போலவே மின்னி மின்னி வானத்தில் என்னை உற்றுப் பார்த்திடும் சின்னச் சின்ன மீன்களே என்ன அங்கே செய்கின்றீர்? எப்படித் தான் நிற்கிறீர்? அன்னை கழுத்தில் அணிந்திடும் அழகு வைர மாலையில் மின்னும் மணிகள் போலவும் வெள்ளை முத்தைப்போலவும் பொன்னுப் பூவைப் போலவும் மின்னிச் சிரிக்கும் மீன்களே எட்ட நின்று பார்க்கிறீர் இரவில் மேலே வருகிறீர் பட்டப் பகலில் எங்குதான் பறந்து செல்வீர் கூறுங்கள். 48