பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேலைக் காரி நான்தான் வீடு தினமும் பெருக்குவேன் பாலைக் குடிக்கப் பூனையும் பதுங்கி வந்தால் விரட்டுவேன் கோலம் அழகாய்ப் போடுவேன் கொஞ்சிக் குழந்தை தன்னையே காலில் ஊஞ்சல் ஆட்டுவேன் கதைகள் எல்லாம் சொல்லுவேன் அப்பா அம்மா துணிகளை அலசித் துவைத்து உலர்த்துவேன் தப்பே ஏதும் செய்திடேன் தண்ணிர் எடுத்து நிரப்புவேன் பழைய சாதம் அம்மாதான் பார்த்துத் தந்தால் உண்ணுவேன் பழங்கள் எதையும் தோட்டத்தில் பறித்து மறைவாய்த் தின்றிடேன் 49 ந-4